இலங்கை

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது.

பன்னங்கண்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் காணப்படும் கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.

images/content-image/2023/01/1705724757.jpg

இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.  அண்மை நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!