மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் நேற்று (23.11) மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.
இவர் மது போதையில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தபோது குறித்து அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)