திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை

தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தார்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சுந்தரேசன் என்பவர்
திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரேசன் சொந்த ஊருக்கு வந்த பின்னர் தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுந்தரேசன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)