தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடத்த அமெரிக்க இளம் நடிகர்

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி (27). எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர். கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.
இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி தனது காரில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகரை கைது செய்ய பொலிஸார் அங்கு சென்றனர். அப்போதுதான் கோல்பிரிங்க்ஸ் மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 39 times, 1 visits today)