வடிகாலில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் காலி நெலுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் வர்த்தக வலயத்தில் பணிபுரிய வந்ததாகவும் அவர் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)