வீடொன்றில் கைவிலங்கு வைத்திருந்த பெண்ணொருவர கைது!
எம்பிலிப்பிட்டிய – மொரகெட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கைவிலங்குகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை குறித்த பெண்ணின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 24 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் பணப்பையில் கைவிலங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





