26 முறை பெயரை மாற்றி அரச வங்கியில் கடன் பெற்ற பெண் : இலங்கையில் சம்பவம்!
போலி ஆவணங்களை தயாரித்து அரச வங்கியின் ஊடாக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்தகல பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் 26 முறை 26 பேரின் பெயர்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி இந்த நிதி மோசடியை செய்துள்ளார்.
அரச வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பல கிளைகளில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அங்கு, 26 பேரின் பெயர்களை பயன்படுத்தி, 26 முறை போலி ஆவணங்கள் தயாரித்து, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.