இலங்கை செய்தி

கொழும்பில் ஒரு மணி நேரத்தில் யாசகம் மூலம் 20 ஆயிரம் சம்பாதித்த பெண்

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதேதெரியந்துள்ளது.

குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மீரிகம – மகாபோதி பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

02 வயது மதிக்கத்தக்க மற்றைய குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய நிலையில் மொரட்டுவை – பிரேமா சிறுவர் இல்லத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.

யாசகம் பெறும் பெண்ணும் மூன்று பிள்ளைகளும் கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​முறைப்பாடு செய்த பெண் ஒரு குழந்தைக்கு நன்கொடை அளித்துள்ளார்.

அந்த பணத்தையும் யாசகம் பெறும் பெண் பெற்றுக் கொண்டதனால் இந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​யாசகம் பெறும் பெண்ணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!