உறவினர்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட பெண்
பெண் ஒருவர் உறவினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சித்ரவதை தாங்க முடியாமல் அவளின் அலறலை அடக்க வீட்டில் உள்ளவர்கள் உரத்த இசையை வாசித்துள்ளனர்.
23 வயதுடைய சமீனா என்ற இந்த யுவதி பிளேடாலும் கட்டைகளாலும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இரண்டு நாட்களாக வீட்டில் தொடர்ந்து பலத்த சத்தம் கேட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காசியாபாத் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குறித்த பெண் நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற சந்தேகமே அவரை சித்திரவதை செய்தமைக்கான காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குறித்த பெண்ணை தாக்கிய சந்தேக நபர் பெண் உயிரிழந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கள்கிழமை நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சமீனா காசியாபாத் சித்தார்த் விஹாராவில் உள்ள தனது உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, அந்த வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதால், சமீனா திருடியதாக கணவன், மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் அவளை அடித்து, அவள் உடல் பாகங்களை பிளேடால் வெட்டி, அவளது அலறல் அக்கம்பக்கத்தினருக்கு கேட்காதபடி உரத்த இசையை இசைத்து, அவளை ‘ஒப்புதல்’ செய்ய வைத்தனர்.
சித்திரவதையால் அவள் இறக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உதவி பொலிஸ் ஆணையாளர் ரவிக்குமார், சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.