இலங்கை

மன்னார்-பேசாலை பகுதியில் 2 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை(4) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேரள கஞ்சா பொதியை மீட்டனர்.

குறித்த பொதியில் சுமார் 2 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இதன் போது குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!