உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் : ஐ.நா

2023 ஆம் ஆண்டில் உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கணவன்/காதலன் அல்லது உறவினரால் கொல்லப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் பெண் கொலைகள் “அபயகரமான அளவில்” இருப்பதாக வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் UN Women நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் 60 சதவீதம் அல்லது 51,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் கணவன்/காதலன் அல்லது உறவினரின் கைகளால் கொல்லப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வீடுதான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான இடமாக உள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)