பிரித்தானியாவில் இருந்து வந்த பெண் வெள்ளவத்தையில் உயிரிழப்பு!
மவுண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் உயரமான மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று (09.09) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மவுண்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரித்தானிய பெண் வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





