Apple நிறுவனத்தால் பெயரை மாற்றவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள பெண்!
பிரித்தானியாவில் பெண் ஒருவர் Apple நிறுவனத்தால் அவரின் பெயரை மாற்றவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Edinburgh நகரைச் சேர்ந்த அவரின் பெயர் சிரி பிரைஸ் (Siri Price) என குறிப்பிடப்படுகின்றது.
Apple நிறுவனத்தின் புதிய iOS மென்பொருளால், ஒவ்வொரு முறையும் அவரை யாராவது கூப்பிடும்போது அருகில் இருக்கும் iPhone திறன்பேசிகளின் “Hey Siri” அம்சம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவர் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்றுவிப்பாளராக வேலை செய்கிறார். அங்கும் அவரைப் பலர் கூப்பிடும்போது அதே சிக்கல்தான் என குறிப்பிடப்படுகின்றது.
புதிய iOS மென்பொருளுக்குப் பின், “Siri” என்று சொன்னாலே போதும்… தொலைபேசி செயல்படுத்தப்படும்.
சிரி என்ற பெயரைக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர்… Apple நிறுவனத்தால் அவர்களின் வாழ்க்கை சிரமமாகிவிட்டதாகக் குமாரி பிரைஸ் தெரிவித்தார்.