இந்தியா

கேதார்நாத் கோவில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறி எறிந்த பெண்

இந்தியாவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.

கேதார்நாத் சிவன் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

Kedarnath Temple: Abuse in Kedarnath sanctum.. Woman sprinkles notes on Shivalinga.. Video goes viral...

கேதார்நாத் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேதார்நாத் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிவலிங்கத்தின் மீது ரூபாய் நோட்டுகள் தூவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கபப்ட்டுள்ள நிலையில் , ரூபாய் நோட்டுகளை சிவலிங்கம் மீது தூவியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே