ஸ்பெயினில் 500 அடி பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் பலி!
தெற்கு ஸ்பெயினில் உள்ள மலகா அருகே பிரபலமான மலையேற்ற பகுதியில் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க பெண் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலையில் நடந்த இந்த சம்பவம் பிரபலமான காமினிடோ டெல் ரே பாதைக்கு அருகில் உள்ள எல் சோரோ கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டப்பின் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)