வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வீசியவருக்கு நேர்ந்த விபரீதம்!
வவுனியா கள்ளிக்குளம் – சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)





