பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காட்டுப்பன்றி
பிரான்ஸில் பாலர் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த காட்டுப்பன்றியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காட்டுப்பன்றியினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
வியாழக்கிழமை இச்சம்பவம் Marseille மாவட்டத்தின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Loup நகரசபை பாலர் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
காலை 8.30 மணி அளவில் வகுப்புகள் முழு வீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பாடசாலை வளாகத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்று நுழைந்துள்ளது.
இதனால் பாடசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பாடசாலை கட்டிடத்துக்குள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு பன்றி பிடிக்கப்பட்டது.





