வெளிநாடு சென்ற மனைவி – இலங்கையில் கணவன் எடுத்த விபரீத முடிவு

கிரியெல்ல பிரதேசத்தில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)