லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள் – 8 பேர் பலி
லெபனான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கையடக்க பேஜர்கள் வெடித்ததில், போராளிக் குழுவைச் சேர்ந்த ஹெஸ்புல்லா மற்றும் ஒரு சிறுமி உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்
மற்றும் ஈரானிய தூதர், அரசாங்கம் மற்றும் ஹெஸ்பொல்லா அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினரை செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரததில் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனானின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 2,750 பேர் காயமடைந்ததாகவும் கூறினார் – அவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.