பிரித்தானியாவில் குப்பை தொட்டியில் வீசும் பொருட்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை : மீறினால் £5,000 அபராதம்!
பிரித்தானியாவில் குப்பை தொட்டிகளில் மற்றவர்களை காயப்படுத்தும் பொருட்களை போடுவதற்கு முன் அதனை கவனமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கழிவு சேகரிப்பாளர்கள் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொள்வதில்லை.
ஏனெனில் அவற்றில் இருந்து கசியும் இரசாயணங்கள் எமது சுற்று சூழலை மாசுப்படுத்தும்.
எனவே, அபராதங்களைத் தவிர்க்க டிவி உரிமையாளர்கள் தங்கள் பெட்டிகளை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் மறுசுழற்சி செய்வது அல்லது அப்புறப்படுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை புறக்கணித்தால் 5000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





