இலங்கையில் சோம்பேறிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அனைவரும் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சும்மா இருப்பவர்களின் சனத்தொகை வீதம் 30% இலிருந்து 35% ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதர்.
இதன் காரணமாக தொற்று நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
(Visited 36 times, 1 visits today)