இலங்கை

யாழ் மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்.நகர் பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த பொலிஸார் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமல் சிலர் செல்கின்றனர்.அதேபோல மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்களை அவதானித்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் அன்றைய தினம் மாலை அல்லது மறுநாள் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளில் கைவிடப்பட்ட நிலைகளில் பொலிஸாரினால் மீட்கப்படுகின்றன.எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வோர் அதனை பூட்டி பாதுகாப்பாக நிறுத்தி செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!