இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கண் நோயுடன் மேலதிகமாக காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் பரவி வருவதால், கல்வி அமைச்சு இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த நோய் வைரஸால் பரவுகிறது, மேலும் கண்களில் வலி, கண்ணீர், கண்கள் சிவத்தல் மற்றும் கண் அரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த கண் நோய் நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பதிவாகியுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஏதேனும் கண் நோய் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, கண்நோய் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சலும் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!