இலங்கை செய்தி

நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு , மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் குறித்த புடவைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பெற்றோல் ஆடைகளுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்க முற்பட்ட வேளை கடையில் நின்றவர்கள் சுதாகரித்து கொண்டு , அவர்களை பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

இந்நிலையிலையே மீண்டும் நேற்றைய தினம் வன்முறை கும்பல் குறித்த புடவைக்கடைக்கு தீ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!