கொள்ளுப்பிட்டி பகுதியில் பயணிகள் பேருந்து மீது முறிந்த விழுந்த மரம் : பலர் காயம்!
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று இன்று (06.10) காலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பயணிகள் பேருந்து குடை சாய்ந்ததுடன், பேருந்தில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)





