ஜெர்மனியில் ரயில் பாதையை சீர் செய்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் ரயில் பாதையை சீர் செய்து கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜெர்மனியில் கொலோன் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தின் தொடருந்து பாதை மறு சீர் அமைக்கும் பணி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் 5.5.2023 அன்று கடுகதி தொடருந்து ஒன்றானது கொலோன் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தினுள் தொடருந்து பாதையை செப்பணிட்ட பணியாளர் மீது மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது 5 பேர் படுங்காயம் அடைந்த நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு படுங்காயம் அடைந்தவர்கள் வானுருதி மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போக்குவரத்து பாதையானது சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதனால் ரயில் பயணிகள் அசௌகரிகத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.