விளையாட்டு

வெற்றி மகுடத்தை நிர்ணயிக்கும் பரபரப்பான ஆட்டம் நாளை!

பாகிஸ்தான் Pakistan மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகளுக்கிடையிலான 3 ஆவதும், கடைசியுமான ஒருநாள் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி பகல் 1.45 மணியளவில் Mirpur, மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்.

இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வென்றுள்ளதால் தொடரை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டம் இதுவென்பதால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.

நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 275 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவர்களில் 243 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 23.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!