உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி! அப்படி என்ன செய்தார்?
நுவரெலியா கொட்டகலையைச் சேர்ந்த பவிஷ்னா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் international book of world record) இடம்பிடித்துள்ளார்.
நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த செந்தில்குமார், ரேவதி தம்பதியின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலக சாதனை புத்தக நிறுவனம் இந்த சிறுமியின் திறமை மற்றும் அசாதாரன நினைவாற்றலை கருத்தில் கொண்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சாதனை பெண்ணாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்காக கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்த அவர், ஏப்ரலில் சாதனை படைத்த சிறுமியாக அறிவிக்கப்பட்டு சின்னம், பதக்கம், சான்றிதழ் ஆகியவை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
(Visited 16 times, 1 visits today)