பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்ததில் முச்சக்கர வண்டியும், கடையும் சேதம்

நேற்று மதியம் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று இயங்கிக்கொண்டிருந்த போது அதன் வலது முன் சக்கரம் கழன்று விழுந்ததில் அருகில் உள்ள கடை ஒன்று சேதமடைந்துள்ளது.
யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ்ஸின் சக்கரம் கழன்று விழுந்துள்ளது
முச்சக்கர வண்டி ஒன்றும் கணனி திருத்தும் நிலையம் ஒன்றும் சக்கரம் தளர்ந்ததால் சேதமடைந்துள்ளது.
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், நஷ்ட ஈடு வழங்காமல் பஸ்ஸை அவ்விடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும் கடைக்காரரும் முச்சக்கரவண்டி உரிமையாளரும் தெரிவித்து பஸ்ஸின் சக்கரத்தை யட்டியந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)