ஐரோப்பா

இத்தாலியில் தன் 24 ஆண்டு பணிக்காலத்தில் 20ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்!

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பாடசாலைக்கு வந்ததாகவும் எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது 56 வயதாகும் சின்சோ பூலியானா தி லியோ எனும் அந்த ஆசிரியர் , 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றார்.

வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.உடல்நிலை சரியில்லை , கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் லீவு எடுத்துள்ளதுடன், மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

எப்போதுமே மிக நீண்ட காலத்துக்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர். சமீபத்தில் ஒருமுறை பள்ளிக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார்.அப்போதும் கூட ஃபோனில் மெசேஜ் செய்தபடியே இருந்துள்ளார். இத்தனைக்கும், தற்போதைய பாடத்திட்டம் என்னவென்றே தெரியாமல், சரியான புத்தகம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதோடு நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் இவர் மீது விழுந்தது. சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன என்று பள்ளியின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால் கடந்த ஜூன் 22ஆம்திகதி பணிநீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும் , 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு வரவே இல்லை என்பது தெரிய வந்ததும், இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்