மாவனல்லை நகரில் திடீரென குழப்பமிட்ட யானை

மாவனல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் ஊர்வலத்தின் இறுதியில் யானையொன்று குழப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் உள்ள யானை வகையை சேர்ந்த ராஜா என்ற யானையே இவ்வாறு குழம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஊர்வலத்தின் முடிவில் இன்று இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பீதியுடன் மாவனல்லை நகருக்கு வந்த யானை தற்போது சந்தைப் பகுதியில் விசேட பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)