ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதி மத்தியில் திடீர் மாற்றம்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான ஒருவருடத்தில் 3,567 அகதிகள் இவ்வாறான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது முந்தைய வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 26% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 130 படகுகள் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தன. அதில் 53 படகுகள் வெற்றிகரமான பிரித்தானியாவைச் சென்றடைந்தன எனவும், மீதமானவை நடுக்கடலில் வைத்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா-து-கலே நகர கடற்கரைகளில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்கும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு கடத்தும் திட்டம் ஒன்றை பிரித்தானியா அண்மையில் அறிவித்திருந்தது.

பின்னர் அதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட, தற்போது அதனை நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற கடுமையான சட்டங்களினால் எதிர்வரும் காலங்களில் இந்த அகதிகளின் பயணம் மேலும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்