இலங்கை

இலங்கை சந்தைகளில் தேங்காய் எண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்களுடைய இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் காரணமாகவே தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் இஷ்டத்திற்கு எண்ணையின் விலையை தீர்மானித்துள்ளதாகவும், ஒரு போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கச் செய்யும் போக்கு காணப்படுவதாகவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார். எதிர்காலத்தில் 1,000 ரூபாய் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!