இலங்கை சந்தையில் தேங்காயின் விலை சடுதியாக அதிகரிப்பு
இலங்கை சந்தையில் தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
சந்தையில் தற்போது 130 முதல் 180 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக தாங்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் நகரை அண்மித்த பகுதிகளில் நிவாரண அடிப்படையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான நடமாடும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த வேலைத்திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகிறது.





