இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய உள்துறை அலுவலக குடியேற்ற தரவுகளின்படி, பாக்கிஸ்தான் நாட்டினரின் உரிமைகோரல்கள் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குழுவை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜூன் இறுதி வரையிலான ஆண்டில், ஆப்கானியர்களிடமிருந்து 10,000 க்கும் அதிகமான புகலிட விண்ணப்பங்களும் ஈரானியர்களிடமிருந்து கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாக்கிஸ்தான் உட்பட வேறு சில தேசத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.