அமெரிக்காவில் ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஸ்க்ரான்டன் நகரில் ராணுவ ஆயுத தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு சப்ளை செய்வதற்காக பீரங்கி, மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உக்ரைன் போருக்கு பிறகு இந்த ஆலை மாதம் சுமார் 30 ஆயிரம் பீரங்கி குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தொழிற்சாலையில் வெடிமருந்து கிடங்கு நேற்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. எனினும் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.