பங்களாதேஷில் கடும் வெப்பம் காரணமாக எடுக்கப்பட்ட திடீர் தீர்மானம்
பங்களாதேஷில் கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகளை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பங்களாதேஷில் 33 மில்லியன் சிறுவர்கள் இந்த நாட்களில் பாடசாலை நடவடிக்கைகளை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷின் சில பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
இது வருடாந்த சராசரி வெப்பநிலையை விட சுமார் 16 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பருவநிலை நெருக்கடியின் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடாக பங்களாதேஷ் கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)