உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவுக்கு தணிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
ஆனால் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பயம் கச்சா எண்ணெய் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 79.75 டாலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பேரல் 74.06 டொலராகவும் இருந்தது.
நேற்று கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)