இலங்கையில் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற பரிசோதனை

சுமார் 2,000 நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தரமற்ற வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்தை சப்ளை செய்த நிறுவனமே தரமற்ற இந்த வகை தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டது என்றார்.
எவ்வாறாயினும், இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மருந்து வழங்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)