ஆஸ்திரேலியாவில் தந்தையை ஆதரித்த மாணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை
கொலையில் ஈடுபட்ட நபருக்கு உதவிய குற்றத்திற்காக பாடசாலை மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவன் தெற்கு அவுஸ்திரேலிய தனியார் பாடசாலை ஒன்றின் பிரபல மாணவன் என்பதுடன் கொலை வழக்கில் தந்தைக்கு உதவிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் தந்தை தனது சொத்துக்களுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை கொன்றுள்ளதுடன், தந்தைக்கு உதவிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, அன்று நடந்ததாகவும், இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் கூறுகின்றனர்.
அந்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான உளவியல் அறிக்கையை நீதிமன்றில் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தனது தந்தையின் செயலுக்கு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் ஆதரவு தெரிவித்ததற்கு அவரது பள்ளியும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.