ஐரோப்பா

குழந்தையைப் பெற்று கொள்கலனில் அடைத்த மாணவி ; கொலைக் குற்றம் சுமத்தியுள்ள UK நீதிமன்றம் !

பெற்றெடுத்த குழந்தையைக் கொன்றதாக மலேசிய மாணவி மீது பிரிட்டனின் வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

டியோ ஜியா ஸின், 22, எனப்படும் அந்த மாணவி தம் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி டியோ குழந்தை பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்அதன் பின்னர், அந்தப் பச்சிளம் குழந்தையை உணவு தானிய கொள்கலனில் ஒன்றினுள் வைத்து மூடி, அந்த டப்பாவை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அந்தப் பையை கைப்பெட்டி ஒன்றுக்குள் டியோ மறைத்து வைத்ததாக பிபிசி செய்தி தெரிவித்தது.

Jia Xin Teo, 22, gave birth to the baby girl in her bathroom

கொள்கலனில் அடைத்து வைத்தால் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தே டியோ அவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் குழந்தை பெற்ற அறிகுறியைக் கண்டவர்கள் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் காவல்துறையிடம் கூறினர்.

பிரசவம் ஆன பின்னர் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளுக்காக அந்த மாணவி மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றுள்ளார். ஆனால், குழந்தை பெற்ற விவரத்தை அங்கு அவர் தெரிவிக்காமல் மறைத்தார்.

உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தாம் குழந்தை பெற்றதை அந்தப் பெண் மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

(Visited 50 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்