பிரான்ஸில் மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவன்
பிரான்ஸில் மாணவன் ஒருவர், மாணவியின் கழுத்தை நெரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதுடைய மாணவன் ஒருவர் சக மாணவியின் கழுத்தை நெரித்துள்ளார்.
collège Edgar Varèse கல்லூரியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சக வயதுடைய மாணவி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வரும் ஒக்டோபர் மாதம் சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அவர் மீது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட வன்முறை பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலுக்கு உள்ளான சிறுமி Robert-Debré மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
(Visited 11 times, 1 visits today)





