பூமியை நெருங்கி வரும் வித்தியாசமான புயல் : மக்களுக்கு ஆபத்தா?
பூமியை வித்தியாசமான புயல் ஒன்று தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வாரம் ஒரு கதிர்வீச்சு புயல் பூமியை தாக்குவதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சூரிய கதிர்வீச்சு புயல் (சோலார் புரோட்டான் நிகழ்வு அல்லது SPE என்றும் அழைக்கப்படுகிறது) சூரியனில் பெரிய வெடிப்புகளுக்குப் பிறகு நிகழ்கிறது.
புரோட்டான்கள் நம்பமுடியாத அதிவேகத்தில் ஏவப்படும்போது பூமியை நோக்கி வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த புயலானது இன்று (14.05) அல்லது நாளைய தினம் பூமியை தாக்க 60 வீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பேஸ் வெதர் லைவ் அறிக்கை சூரிய கதிர்வீச்சு புயல்கள் பூமியில் உள்ள மக்களுக்கு ஆபத்தானவை அல்ல எனக் குறிப்பிடுகிறது.
இந்த கதிர்வீச்சு புயல்கள் காரணமாக டிரான்ஸ்போலார் விமானங்கள் சில நேரங்களில் திசைதிருப்பப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மற்றொரு விளைவு என்னவென்றால், இது துருவப் பகுதிகளில் சில தகவல்தொடர்பு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.