சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 14 வயது சிறுவன் கைது

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் பல பல்கலைக்கழக கட்டிடங்களை மூடினர்.
கத்தியால் தாக்கப்பட்ட 22 வயது இளைஞருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கவலைக்கிடமான நிலையில் இருந்தவரின் உடல்நிலை தேறி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கத்தியால் குத்திய சிறுவனுக்கு தீவிரவாத சிந்தனை உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 29 times, 1 visits today)