ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இரு உயிர்களை காப்பாற்றி தன்னுயிரை இழந்த இலங்கை தமிழ் இளைஞர்

பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியின்போது ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், விமானியான 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அருவியில் இரண்டு குழந்தைகளை உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் மோகனநீதன் ஈடுபட்டிருந்தார்.

எனினும், குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார், ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அவரது சடலம் நீருக்கடியில் இருந்து மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோகனநீதன் இறுதிச்சடங்குகளுக்காக GoFundMe பக்கம் மூலம் நிதி திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி