பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராகிய இலங்கை தமிழர்
																																		பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையர் பதவியேற்றுள்ளார்.
அகதியாக சென்ற இலங்கை தமிழர் ஒருவரே இவ்வாறு பதவியேற்றுள்ளார்.
தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே Ipswich மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார்.
இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறான பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதவியை வகிக்கும் முதல் இந்து இவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
நகரம் தலைவர் நீல் மெக்டொனால்ட் கூறுகையில், போரிலிருந்தும் அதன் ஒடுக்குமுறையிலிருந்தும் தப்பி வந்து புதிய வாழ்க்கையை உருவாக்கி பிரித்தானிய சமுதாயத்திற்கு பங்களித்த அகதி ஒருவரை நியமிப்பது சமூகத்திற்கு ஒரு மதிப்புமிக்க செய்தியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
        



                        
                            
