ஹஜ்ஜில் கலந்துகொண்ட இலங்கை யாத்திரிகர் ஒருவர் உயிரிழப்பு
ஹஜ்ஜில் கலந்துகொண்ட இலங்கை யாத்திரிகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மக்காவைச் சூழவுள்ள பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அவருக்கு சுகவீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக மக்காவில் 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 34 times, 1 visits today)





