அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறை தண்டனை விதிப்பு!

அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கோடரியால் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர கொலையின் விவரங்கள் விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நேற்று விவரிக்கப்பட்டது.
குரேரா 30 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலுக்கு பரிசீலிக்கப்படலாம் என்று நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறினார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குரேரா தனது மனைவி நெலோமி பெரேராவை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் கணவரை பிரிந்து செல்ல தயாராக இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)