இலங்கை

சர்வதேச விமானத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் குழப்பகரமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய தினம் (18) விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (19) ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது வழக்கு மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!