உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொது மக்களுக்கு விடு்த்துள்ள விசேட எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டு வரிப்பணம் வசூலிக்கும் நபர்களால் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட திணைக்களம், சில நபர்கள் தம்மை அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப் பணத்தை வசூலித்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போலி ஐஆர்டி அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் பணம் செலுத்தியிருந்தால் மற்றும் தமது பிரதேசத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாக அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
(Visited 10 times, 1 visits today)